திருவனந்தரபுரம்: கேரள எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கேரள நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்ந்திரன் ஞாயிற்றுக்கிழமை தம்மை கொரோனா சோதனை செய்தார். கொல்லம் எம்.பி.யான அவர் இந்த தகவலை தமது பேஸ்பதிவு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த சில நாட்களில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரேமச்சந்திரன், சிகிச்சைக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கே.சி.வேணுகோபால், இ.டி முகமது பஷீர், பென்னி பெஹன்னன் ஆகியோருடன் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.
Patrikai.com official YouTube Channel