புதுடெல்லி: லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் 10 ரோந்துப் பகுதிகள், சீன ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்பகுதிகள், லடாக்கின் வடக்கில் டெப்சாங் சமவெளியிலிருந்து, தெற்கில் பான்காங் சோ ஏரி வரை பரந்துள்ளவையாகும்.
“இந்தியாவின் ரோந்து நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதாலேயே, சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாக ராஜ்ய சபாவில் தெரிவித்தார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல இடங்களில், இருநாட்டு எல்லைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் முதலாகவே, இந்திய ராணுவம், ரோந்துப் பகுதிகள் 9, 10, 11, 12, 12A, 13, 14, 15, 17, 17A ஆகியவற்றில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.