டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது.

ஆகஸ்டு 2ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக அவர், டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர், கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றார்.
பின்னர் சில தினங்களுக்கு முன்னர், எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வால் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாக குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.
இந் நிலையில், இன்று மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுமையான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]