
மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் “369” எண் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் குறித்து தான் இணையத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
அவர் தனது அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் ‘369’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு காரின் நம்பர் பிளேட்டிலும் ஒரு தனித்துவமாக தெரிவதற்காக 369 என்ற எண்ணை குறித்துள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.
அவரது ஆடம்பரமான கார் சேகரிப்பில் பி.எம்.டபிள்யூ, இ 46 எம் 3, மினி கூப்பர் எஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே, டொயோட்டா லேண்ட் குரூசர், ஆடி ஏ 7, மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட், டொயோட்டா பார்ச்சூனர் போன்ற கார்களும் அடங்கும்.

இருப்பினும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது முதல் காரான மாருதி 800 காரை வாங்கி அன்பை வெளிப்படுத்தினார்.
Patrikai.com official YouTube Channel