நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைத்தது என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர்.லீ-மெங் யான், அந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட என்ற ஆதாரத்தை தான் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரத்திற்கான ஹாங்காங் கல்வி நிறுவனத்தில் வைராலஜி & இம்யூனாலஜி(நோயெதிர்ப்பு சக்தி) பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற இவர், கொரோனா பரவல் குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியுமென்றும், ஆனால் அந்த விஷயம் மறைக்கப்பட்டதென்றும் குற்றம் சாட்டினார்.
சீனாவில் தனக்கு ஆபத்து இருந்ததால், ஹாங்காங்கிற்கு தப்பினேன் என்று கூறியுள்ள இவர், தனது விபரங்கள் அனைத்தையும், அரசு தரவுதளத்திலிருந்து சீன அரசாங்கம் நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
“சீனாவினுடைய வூஹானில் ஒரு ஈரமான சந்தைப்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படுவது பொய்; ஆனால், அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.
இந்த வைரஸ் இயற்கையான முறையில் உருவானதல்ல. இது வூஹானிலுள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து உருவானதாகும்” என்றுள்ளார் அவர்.