இங்கிலாந்தின் லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துக்கு செல்போன்களுக்கு ரிங் டோன் அமைத்து கொடுக்க ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்திருந்தார். அதற்காக ரூ.3.47 கோடி சம்பளம் பெற்றார். ஆனால் அதற்கு அதற்கு வருமான வரி செலுத்தவில்லை என புகார் வந்தது.
இதையடுத்து வருமான வரித்துறை யினர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வழக்கு தொடர்ந்திருந்தனர். சம்பளமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்ட ளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்த தாக ஏ.ஆர்.ரகுமான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.