
பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இந்திரஜித் லங்கேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த 04.09.20 அன்று நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel