ந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு குற்றச்சாட் டுக்கள் கூறி வந்தார். வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சொன்ன கங்கனா அடுத்து மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினரை சேர்ந்தவர்கள் மீது புகார் கூறி உள்ளார். மறைமுகமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே மீதும் புகார் கூறினார்.


தற்போது மனாலியில் இருக்கும் கங்கனா அங்கேயே இருப்பது நல்லது மும்பை வந்தால் பெண்கள் அவரது கன்னத்தில் அறைவார்கள்’ என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பிரமுகர் தெரிவித்தார்.
அதற்கு சவால் விடுத்த கங்கனா,’ மும்பைக்கு வரவேண் டாம் என்று பலரும் எச்சரிக்கிறார்கள் வருகிற செப்டம்பர் 9-ந்தேதி (நாளை) மும்பை வருகிறேன் முடிந்தால் என்னை தடுங்கள்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் கங்கனாவுக்கு ஒய் பிளஸ் செக்யுரிட்டியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் மனாலியில் தற்போது கங்கனா தங்கி இருக்கிறார். அந்த வீட்டுக்கு போலீஸ் காவல் போடப் பட்டிருக்கிறது.
சுஷாந்த் தற்கொலை வழக்கு ஒருபக்கம் நடக்கும் நிலையில் தற்போது அதன் கிளையாக கங்கனா – சிவசேனா மோத லாக மாறி இருக்கிறது. இதனால் மும்பை யில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மும்பையில் கங்கனா கட்டி இருக்கும் மணிகர்ணிகா பட நிறுவன பில்டிங்கில் சட்டவிரோதமாக கட்டுமானம் கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அந்த கட்டித்தின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி இல்லாவிட்டல் அந்த கட்டிடத்தை மாநகராட்சியினர் இடித்து தள்ளுவார்கள் எனத் தெரிகிறது.