தமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என பொறிக்கப்பட்ட டி-சர்ட் புரட்சி கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

இது தவறான முன்னுதாரணம் என நடிகரும் சமூக செயல்பாட்டாளருமான அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/abisaravanan/posts/3554804397884004

கடந்த இரு நாட்களாக #இந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் பிரபலங்களால் பிரபலபடுத்தப்படுகிறது…..

அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டுகாட்டலும்,

#இந்தி என்பது ஒரு மொழி…
#இந்தி ஒரு தகவல்மீடியம்…

தகவல்களை பரிமாறி கொள்ள இந்தியாவில் அதிகபடியாக பேசப்படும் மொழிகளில் ஒன்று….

நமது தாய்மொழியை #தமிழ் நமக்கு உயிர்போல இந்தியை தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு….

ஒரு சில தீவிர இந்தி மொழி பற்றாளர்கள் , உணர்வாளர்கள் மற்றும சில அரசியல் வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியை திணித்து நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர்…

ஆனாலா இந்தியை படித்த பல ஆயிரகணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிநாடுகளில் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணிசெய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்..

மொழி மட்டுமல்ல எந்த ஒரு விசயத்தையும் வலுகட்டாயமாக திணித்தால் அல்லது கட்டாய படுத்தினால் இயற்கயாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும் என்பது மனிதன் இயல்பு….

நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இந்தியை கற்காமல் உதாசீனபடுத்தியதால்… வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு ,உறைவிடம் மற்றும் இதர அடிப்படை ததேவைகளுக்கு கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைை மூலம் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருக்கிறது…

நான் ஒரு நடிகன் என்பதும் சமூக செயற்பாட்டாளன் என்பதும் நண்பர்கள் அறிந்தததே…

கடந்தாண்டு நீட் தேர்வுக்காக தீடிரென நமது தமிழக மாணவர்கள் ராஜெஸ்தான் செர்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட பாது… நமது உதவி மூலம் இரு மாணவர்கள் ஜெய்பூர் சென்றனர்…

அவர்களது தவிர மேலும் இருவருக்கு உதவி தேவை என அறிந்து விமானம் மூலம் நான் மும்பை சென்று அங்கிருந்து ராஜஸ்தான் சென்று அங்கிருநது அவசரமாக ஜெய்ப்பூர் ரயில் நிலையம் சென்று அவர்களை தேடிதேடி நமது தமிழக மீடீயா நண்பர்கள் மற்றும் தமிழ் சங்க நண்பர்கள் உதவியுடன் சந்தித்து தேர்வுமையம சென்று உதவியது நினைவில் வந்து சென்றது….

மேலும் அசாம் வெள்ளத்தி்ன் பாதிப்புகளை அறிந்து அவரகளுக்கு வெள்ள நிவாரண உதவி செய்ய தனியாக உடனடியாக டெல்லி சென்று அங்கிருந்து மேற்குவங்காளம் சென்று அங்கிருந்து பல கிராமங்களை சாலை மற்றும் படகு வழியாக கடந்து கவுகாத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடைந்து… அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பிறகு அரசு மற்றும் ராணுவ உதவியுடன் எட்டு நாட்கள் எட்டு மாவட்டங்கள்… மலைவாழ்மக்கள் .என எட்டாயிரத்திற்க மேலான மக்களை அடைத்து எனது சொந்த செலவில் நிவாரண உதவிகள் செய்து வந்தேன்..

அங்கு ஆங்கிலமும் இந்தியும் கூட சில இடங்களில் உதவவில்லை… உள்ளூர் வாசிகள் வேறு வேறு உள்ளூர் பாசைகளில் பேசிகிறார்கள்.

ஆனாலும் நாம் நிவாரணம் தந்து உதவியபோது அவர்களது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எந்த மொழி தெரியாவிட்டாலும் நன்கு உணர முடியும்….

கடந்தாண்டுகளில் டெல்லியில் நமது தமிழக விவசாயிகள் போராடிய போது… உணவின்றி அவர்கள் சிரமபடுவதை சமூக ஊடகம் மூலமஅறிந்து இரவோடு இரவாக டெல்லி விமானத்தில் சென்று…

அதிகாலை மூன்று மணிக்கு கடுங்குளிரில் ஐந்தர்மந்தர் சாலையில் எந்த முகாமில் தூங்குகிறார்கள் என தெரியாமல் பஞ்சாப் விவசாயிகள் கூடாரத்தில் திரையை திறந்தபோது… என்னை திருடன் என நினைத்து தாக்க தொடங்கி…

ஆங்கிலத்திலும் தமிழிலும் “உதவி ” உதவி நான் திருடன் இல்லை’
என கத்தி பிறகு உடனடியாக டெல்லி போலீஸ் வந்து விசாரணைக்கு எனனை மீட்டு பத்திரமாக காவல் நிலையம் அழைதது சென்று…. விச ரித்த போது..அங்கும் ஆங்கிலம் பயனளிக்கவில்லை…

அந்த போலீஸ் ஏட்டு இந்த வெறி பிடித்தவர் போல தமிழன் என்றவுடன் மலும் கேவலமாக நடத்த தொடங்கினார்… ஒருவழியாக ஆங்கிலம் தெரிந்த #அசோக என்ற இன்பெக்டர் வந்து என்னை பற்றி விசாரித்து யூடியூப் கூகுள் மூலம் அறிய மன்னிப்பு கேட்டு தகுந்த மரியாதையுடன் காலை உணவு அளித்து என்னை தமிழக விவசாயிகளிடம் சேர்த்தார்.. இன்றும் அவர் எனக்க நல்ல நட்பில் உள்ள சகோததர்….

இரண்டாம் முறை டெல்லயில் விவசாயிகள் போராட்டத்தின் போதும்சுதந்திரதினம் அன்று அனைவரும் கைது செய்யப்பட்டு டெல்லி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட போது அதே இன்ஸபெக்டர் அசோக் அவர்களை தொடர்பு கொண்டு விவசாயிகளை சந்தித்து..
அவர்களிடம் கைது காரணம் கேட்டால் சுதந்திர தினதன்று அரை நிர்வாணமாக டெல்லியில் திரிந்தால் கைது என்று நிலை அறிந்து டெல்லி மார்க்கெட்களை ஆட்டோவில் ஓடி தேடி தேடி அனவருக்கும் வெள்ளை வேட்டி சட்டை வாங்க நான் பட்ட பாடு இந்தி தெரியாமல்…

ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து ஜம்பது விவசாயிகளும் வெள்ை வேட்டி சட்டை வாங்கி தந்து சிறையிலிருந்து கம்பீரமாக சுதந்திரமாக நடந்நு ஐந்தர் மந்தர் பகுதய வந்தடைந்து பாத்தபோது தான் எனக்கு நிம்மதி…..

எதற்காக இந்த நீள் பதிவு எனில்..

இந்தி கற்பதால் நமது அறிவு மழுங்க போவதில்லை… இந்தி ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுகொள்ளவதில் எந்த தவறும் இல்லை…..

அந்த கால மன்னர்கள்.. கவிஞர்கள். புலவர்கள் என பலமொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர்….

ஆனால் எந்த காலத்திலும் தமிழை திட்டமிட்டு தவிர்த்து அல்லது நீக்கி இந்தியை திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்க கூடாது….
அனுமதிக்க முடியாது…

உதாரணமாக

தமிழ்நாட்டில் உள்ள
ஏடிஎம்கள் மெசின்கள்
அறிவிப்பு பலகைகள்..
மத்திய அரசு அலுவலகங்களில்
தமிழுடன் இந்தியையும் ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை..

ஆனால் தமிழை தவிர்த்தால்

தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்கு கற்றுதரும்….

அது

தமிழனின்
மொழிப்பற்று வீரம்,ஒற்றுமை…

ஆனால் ஒருசில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க
#இந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்…

#இந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிநது கொள்கின்றது…
இளைய சமுதாயம்….

எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி #தமிழுக்கு முதலிடம் அளித்து

ஆங்கலம் மற்றும் இந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும்… அது நிச்சயம உதவும்…

இந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #இந்திதெரியாதுபோடா என்ள வாசகங்கள் டீசர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுகொள்கிறேன் …

அன்புடன்

இந்தி தெரியாத தமிழன்

அபிசரவணன்