கிருஷ்ணகிரி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கிகான் திட்ட முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2.70 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கிசான் திட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில், முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த ஆய்வில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட போலி பயனர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.