ஊட்டி:  குளுகுளு  ஊட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு வர 9ந்தேதி முதல் தனி பாஸ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா அறிவித்து உள்ளார்.
கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இன்றுமுதல் பொதுப் போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், இதுவரை சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்வாசஸ்தலங்களுக்கு  சுற்றுலா செல்ல பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் 9 ம் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்படும் எனவும், சுற்றுலா பயணிகளுக்காக தனி பாஸ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல இ-பாஸ் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்காக இ-பாஸ் விண்ணப்பத்தில் ‘சுற்றுலாப் பயணிகள்’ என்று விண்ணப்பிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் மட்டும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்.

அவற்றில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இ-பாஸ் பெற்று லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கலாம்.

ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.