கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கத் தொடங்கி உள்ளது. முன்னதாக கல்விக்கட்டணத்தை முழுவதும் செலுத்தும்படி பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்தது.
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து, தவணை முறையில் செலுத்தும் பணி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் மீது, 75 புகார்கள் வந்துள்ள தாகவும், அந்த பள்ளிகளில் 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.