டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, மாணாக்கர்கள் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கவும், தாய்மொழி, ஆங்கிலம் உடன் மற்றொரு மொழியை கற்கும் வகையில் மும்மொழி கொள்கையை அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், அமல்படுத்தவும், படிக்கும் போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த புதிய கல்வி கொள்கை தொடர்பாக இன்றுமாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.