சென்னை: தமிழகம் ஏரராளமான தொழில் முதலீடுகளை பெற்றுவருவதாக மாநில அரசு கூறி வருகிறது. ஆனால், தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 66.31 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை மாதம் 31ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்போர் மொத்த எண்ணிக்கை 66.31 லட்சம் பேர் என கூறப்பட்டுள்ளது.
18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் , 12.50 லட்சம் பேர்
கல்லுாரி மாணவர்கள், அதாவது 19 வயது முதல், 23 வயது வரை உள்ள, 17.46 லட்சம் பேர்
24 வயது முதல், 35 வயது வரை, 24.55 லட்சம் பேர்.
36 வயது முதல், 57 வயது வரை 11.69 லட்சம் பேர்
57 வயதிற்கு மேற்பட்டோர் 9,192 பேர்
அரசு பணிக்காக காத்திருப்போர் மொத்த எண்ணிக்கை 66.31 லட்சம்
இவர்களில் 1.32 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.