பெங்களுரூ:
ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு திரும்ப பெற உள்ளது.
இந்த முடிவை மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான துணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல அமைச்சர்களின் மீதான தற்போதைய வழக்குகள் ரத்து செய்யப்படும். சட்ட அமைச்சர் ஜெய்ராம் மதுசுவாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், சி டி ரவி ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 143,147,339  ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூர் மாவட்டம் ஹன்சூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டை தொடர்பானதாகும்.
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது நலன் காரணமாக, இது போன்ற பல்வேறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, இது அமைச்சரவை நடத்திய வழக்கமான நடைமுறை என்றும் மதுசுவாமி தெரிவித்துள்ளார்.