டலும் உள்ளமும் தூய்மையாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறியிருக்கின்றனர்.

மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம்’ எனும் மந்திரமாகும்.  இந்த  “ஓம்’ என்ற சொல். அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்’ என்ற ஒலியும், அதன்  நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. ‘அ’ பிரம்மனையும், ‘உ’ விஷ்ணுவையும், ‘ம’ ருத்ரனையும், ‘ம்’ சக்தியையும், அதன் நாதம்  சிவ பரம்பொருளையும் குறிக்கும்.

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக்  குறிப்பது “ஓம்’. கலைஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக  உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

எனவேதான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது’ என்று பொருள். ஆம்… கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர்  இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.

நமது உடலும், உள்ளமும் தூய்மையாக,துளசி தேவியை வழிபட்டு கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை கூற வேண்டும் உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதன் முன் நின்று கூற சிறப்பாகும்.

யாத்ருஷ்டா நிகிலாக ஸங்கசமனீ ஸ்ப்ருஷ்டா வபு:பாவனீ ரோகாணா மபிவந்திதா நிரஸனீ ஸிக் தாந்தக க்ராஸினீ

அஷ்டம சனி தோஷம் நீங்க

சனி பகவான் நமது ராசிக்கு 8ல் வரும் போது பல துன்பங்களை கொடுப்பார்.அந்த துன்பத்திலிருந்து விடுபட கீழ்க்காணும் சனி பகவான் காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை கூற வேண்டும்

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோமந்த ப்ரசோதயாத்

மூல மந்திரம்

ஓம் ஹ்ராம் க்லீம் க்ரௌம் சம் சனீஸ்வராய நமக

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ ஜெபிக்க வேண்டிய மந்திரம்

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை கூற வேண்டும்

ப்ருக்ருதிம் ஜகதாம் ஸ்திரீஷு

பதிபுத்ரவதீஷுச

யந்த்ரேஷுபூஜயேத் தேவீம்

தநஸந்தான ஹேதவே

இகலோக ஸ்ுகம் புங்க்த்வா,

யாத்யந்தே ஸ்விபோ:பதம்

பில்லி, சூனியம் நீங்கிட

நமது குடும்பத்தில் பில்லி, சூனியம் வராமல் இருக்கவும், வீட்டில் உள்ள பில்லி, சூனியம் செயல்படாமல் இருக்கவும் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை கூற வேண்டும்.

பராபிசார சமந:

துக்க பஞ்ஜந காரக

லவஸ்த்ருஷ:களாகாஷ்டா

நிமேஷ:கஷ முஹூர்த்த

கடன் தொல்லை நீங்கிட

ஒரு மனிதனை துன்பப்படுத்துவது கடன் ஆகும்.அந்தக் கடன் தொல்லையில்லாமல் இருக்க நரசிம்மரை வழிபட்டு, கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108முறை கூற வேண்டும்

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி

தந்தோ நாரஸிம்ஹ:ப்ரசோதயாத்

உடல் உபாதைகள் நீங்கிட

நமக்கு வியாதியால் வரும் உடல் உபாதைகள் நீங்க, கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை கூற வேண்டும்

தத்ரஜஸ்தவ தநோதி பாதுகே

மாநஸாந்யகடி நாநி தேஹிநாம்!

ப்ரஸ்தரஸ்ய பதவீக தஸ்ய யத் வ்யாசகார முநிதர்மதாரதாம்.

குடும்பத்தில்  துன்பங்கள் நீங்கிட

மனிதனை மிகவும் சங்கடப்படுத்துவது துன்பமாகும்.அந்த துன்பம் நீங்க, கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108முறை கூற வேண்டும்.

சக்தே பஜேத்வாம் ஜகதோஜநித்ரீம்

சுபஸ்ய தாரித்ரீம் பிரணதார்தி ஹந்த்ரீம் நமோ நமஸ்தே

குஹ ஹஸ்த பூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதந்நிதத்ஸவ:

 நல்ல காரியம் நடக்க

நமது குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை கூறி வர நல்ல முறையில் நடக்கும்.மேலும் தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வர ஆபத்தை போக்கி ஜெயத்தை தரக்கூடிய ஓர் அற்பதமான மந்திரம் ஆகும்.

ஓம் ஜாதவேத ஸே ஸூனவாம் ஸோமமராதீயதோ நிதஹாதி வேத

நம்பிக்கையோடு ஜெபித்தால், நன்மைகள் கிடைக்கும்.