கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்ற வீடியோக்கள் புகைப்படங்கள் என பதிவேற்றி வருகின்றனர் .
இந்நிலையில் தி.மு.க தலவைரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரை எப்பொழுதும் முழு நேர அரசியல்வாதியாக வேட்டி, சட்டையில் பார்த்தவர்களுக்கு இந்த ஃபோட்டோ சற்று வியப்பை அளித்துள்ளது .