சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியான பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த வருண்குமார் சென்னை காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேவகோட்டை சப்-டிவிஷன் ஏஎஸ்பி கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையர் விமலா, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு – 1 துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக மாற்றப்பட்டு உள்ளார்.
டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜி சாம்சன், உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர், உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சுந்தரவடிவேல், திருப்பூர் காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையர் என பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ஏஐஜி ஸ்ரீதர்பாபு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராகவும், சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் சுதாகர், டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு. சென்னை, எஸ்.பி. முத்தரசி, சிபிசிஐடி-2 எஸ்.பி, சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்ட வேலூர் எஸ்.பி. பிரவேஷ் குமார் தருமபுரி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி. ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.