இன்று வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளையொட்டி, இன்று அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள், மதுரை போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது. அவரது ரசிகர்கள் ஆசையின் மிகுதியால் இதுபோன்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழக்ததில், எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை வேறு எவராலும் முடியாது என்றார்.
மேலும், தமிழகத்தில் அரசியல் கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என கூறி மாநில பாஜக தலைவர் முருகனுக்கு உரிமையில்லை, அவர் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்றும், கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்றார்.
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்றும் கூறினார்.
ராமநாதபுரம் எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அரசின் நிர்வாக காரணங்களால்தான ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார், இதற்கு பாஜக அழுத்தம் கிடையாது என்றவர், அவர்களால் எங்களை ஒருபோதும் நிர்பந்திக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.
சசிகலா விடுதலை மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.