சென்னை எழும்பூர்- செங்கோட்டை (வண்டி எண்: 06181) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டை- எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
எழும்பூர்- கன்னியாகுமரி (02633) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி-எழும்பூர் (02634) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இரவு 9.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
திருச்சி-நாகர்கோவில் (02627) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருச்சி (02628) இடையே அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.