வேலுர்: வேலூர் அருகே கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு வீடு திரும்பிய வட்டாட்சியர்,  திடீர் மரணம் அடைந்தார். இது பரபைரப்பை ஏற்படுத்தி உள்ளமுது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டாட்சியர் முரளிகுமார் (வயது 53). இவர் கொரோனா காலக்கட்டத் தில் மக்கள் பணியாற்றி வந்தார். இதனால், உடல் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆகஸ்டு 30ந்தேதி அன்று சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்தது. இதனால், நேற்று (செப்டம்பர் 4ந்தேதி) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில்  உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.