சென்னை: திருச்செந்தூர் கோவிலில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ஆனால், இணையதளம் சரியாக வேலைசெய்ய வில்லை என புகார் எழுந்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் 1ந்தேதி முதல் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் அதிகஅளவில் கூடிய நிலையில், சமூக விலகல் கேள்விக்குறியானது. இதையடுத்து, தமிழகஅறநிலையத்துறை சார்பில், பிரபலமான முக்கிய கோவில்களில் சாமி தரிசனத்துக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி டோக்கன் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் பிரபலமான கோவில்களில் ஆன்லைன் அனுமதி நடைமுறைப்படுத்தப்ப ட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்கம், பழனி, மதுரை மீனாட்சியம்மன் உள்பட பல முக்கிய ஸ்தலங்களி லும் ஆன்லைன் அனுமதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றுமுதல் செந்தூர் முருகனை தரிசிக்கவும் ஆன்லைன் நடைமுறை தொடங்கி உள்ளது.
www.tnhrc.gov.in என்ற இணையதளத்தில் அனுமதி சீட்டுக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என்றும் ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், காலைமுதலே இணையதளம்தான் வேலைசெய்யவில்லை என பக்தர்கள் புகார் கூறி வருகின்றனர்.