லடாக்:
டாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின் படி, லடாக்கில் உள்ள ஆதிக்க எல்லைக்கோடு வழியாக சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவந்திருக்கிறது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய சீன ராணுவ வீரர்களுக்குடையே நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சீனா ஏப்ரல் மே மாதங்களில் லடாக்கில் தன்னுடைய ராணுவ வீரர்களை குவித்து வந்தது.
இந்தியா சீனா பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனா பின்வாங்குவதாக தெரிவித்தது, ஆனால் தற்போது டெப்சங் சமவெளியிலிருந்து சுசுள் வரை சீன ராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது என்று ஒரு மூத்த அரசியல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆதிக்க எல்லைக்கோடு மற்றும் காள்வான் பள்ளத்தாக்கில் சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜூலை 5ஆம் தேதி இந்தியா, சீனாவுடன் பல சுற்றுப் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் அங்கிருந்து ஒதுங்கினர்,  சீனாவும் சர்ச்சைக்குரிய பகுதியை விட்டு ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டு தற்போது ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை ராணுவ வீரர்களை நிறுத்திவைத்திருப்பது தெரியவந்துள்ளது.