பெங்களூரு: கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சைக்கு பின்னர் அவர் குணம் அடைந்தார்.
இந் நிலையில் அவரது அமைச்சரவையில் பஞ்சாய்த்து ராஜ் அமைச்சராக உள்ள ஈஸ்வரப்பா, பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது.
அதன் பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். ஈஸ்வரப்பா முழு குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்திப்பாக தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel