டெல்லி: உலக நாடுகளில், ஆகஸ்டு மாத கொரோனா பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு 54%, கொரோனா உயிரிழப்பு 50 சதவிகிதமாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,87,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இது உலக அளவில் 54 சதவிகித பாதிப்பு என்று கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் இந்தியாவில், கொரோனா பாதிப்பு 2 மில்லியனை நெருங்கியதாக தெரிவித்து உள்ளது.
உலக அளவில் வேறு எந்த நாடுகளில் இந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும், இந்தியாவிலேயே 54 சதவிகித பாதிப்பு என்று குறிப்பிட்டள்ளது.
அதுபோல, கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக, 28,859 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு இது முந்தைய மாதங்களின் எண்ணிக்கையிலிருந்து 50% அதிகரித்துள்ளது என்றும் பட்டியலிட்டு உள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 36.8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்டு மாதம் மட்டும், 19,87,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 54% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,87,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் (19 , 04,462) பதிவான தொற்று நோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
ஆனால் உயிரிழப்பை பொறுத்தவரை, இந்தியாவில் 28,859 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது 50 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டள்ளது.
அமெரிக்காவில் ஆகஸ்டு மாதம் மட்டும் கிட்டத்தட்ட 31,000 உயிரிழப்புகளும், பிரேசில் 29,565 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில், இந்தியாவில் இதுவரை 28.3 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.