
இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார்.
விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இருவரும் தனி விமானம் மூலம் சென்றுள்ளது போல் தெரிகிறது.
[youtube-feed feed=1]