க்கிய அரபு அமிரகம் – இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது. இந்த விமான சேவைக்கு, சவூதி அரசு,  தனது நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல, சவூதி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சவூதி வரலாற்றில், முதன்முறையாக இஸ்ரேல் விமானம் தங்களது நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல சவூதி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  இடையேயான இராஜாங்க ரீதியிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையையும் அமீரகம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரசு அமிரகம் – இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்யப்பட்டன.

அதன்படி,  அபுதாபி – டெல் அவிவ் இடையே நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது.  இந்த வரலாற்று சிறப்பு மிக்க விமான பயணத்தில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரோடு சேர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.

இன்று அபுதாபிக்கு வரும் EL AL விமானம் நாளை இங்கிருந்து டெல் அவிவ்விற்கு புறப்படும்.

‘இந்த விமைனம், சவுதி வான்வெளியை பயன்படுத்துவதால் பயண நேரம் 3.15 மணி நேரமாக இருக்கிறது. சவுதி அரசு அனுமதி மறுத்திருந்தால் அபுதாபி – டெல் அவிவ் இடையேயான பயண நேரம் 8.30 நேரமாக இருந்திருக்கும்.

இஸ்ரேலுக்கு தங்கள் நாட்டின் வான் பகுதியை பயன்படுத்தி விமானங்களை இயக்க இதுவரை இந்தியாவிற்கு (2018) ( Mumbai – Tel Aviv & Delhi – Tel Aviv) மட்டுமே அனுமதி அளித்திருந்தது. சவுதி. தற்போது UAE நாட்டிற்கும் அந்த அனுமதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.