பிரதமர் மோடி ஒவொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானொலியில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார். இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்.
ஆனால், சமீப காலமாக அவரது மான் கி பாத் நிகழ்ச்சி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதை தவிர்த்து வருகிறது. இது மக்களிடையே கடுமையான வெறுப்புகளை உருவாக்கி உள்ளது.
இதன் காரணமாக பிரதமர் மோடியின் “மான் கி பாத்” வீடியோ “விருப்பங்களை” விட அதிக அளவிலான “விருப்பு வெறுப்புகளை” பெறுகிறது என யுடியூபர் தெரிவித்து உள்ளது.
திரைப்படம் பார்க்க தொடங்கும்போது, தியேட்டர்களில் வெளியாகும் விளம்பரங்கள், எப்படி பார்வையாளர்களை வெறுப்புக்குள்ளாக்குமோ, அதுபோல, பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியும், மக்களிடையே வெறுப்புக்குள்ளாகி வருகிறது.
ஆரம்ப காலத்தில் மான் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்த நிலையில், தற்போது, மோடியின் நிகர்ச்சி வளவள கொலகொல என இருப்பதாலும், அதிக நேரம் நீடிப்பதாலும், அதை பொதுமக்கள் பார்க்க “விரும்பாத” போக்கு தொடர்ந்து வருகிறது.
நேற்று (ஆகஸ்டு 30) பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ யூடியூப் வீடியோ 14,000 “லைக்குகளுடன்” ஒப்பிடும்போது இன்று இரவு 8:30 மணியளவில் 20,000 “விருப்பு வெறுப்புகளை” (dislikes) உருவாக்கியுள்ளது.
பிரதமர் தனது யூடியூப் சேனலில் 7.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள நிலையில், அவரது நிகழ்ச்சியை வெறும் 3.8 லட்சம் பேர் மட்டுமே பார்த்திருந்தனர். சுமார் 50 சதவிகிதம் பேர் அவரது வீடியோ பார்ப்பதை தவிர்த்து உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வாரம் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் – ஜே.இ.இ (முதன்மை) மற்றும் நீட்-இளங்கலை தேர்வுகளை நடத்தும் மையத்தின் முடிவுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்து உள்ளனர். மேலும், புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, கொரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது போன்ற தற்போதைய நிகழ்வுகள் குறித்து பிரதமர் பேசுவார் என மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,
மோடியோ, நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும், பொம்மை செய்யுங்கள், ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது என்று எதை எதையோ பேசியது மக்களி டையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய நிகழ்ச்சிக்கு முன்னதா, பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி, #Mann_Ki_Nahi_Student_ Ki_Baat என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் பிரபலமானது.
ஆனால், மோடியின் நிகழ்வுக்கு பிறகு, “அவரது வீடியோக்களுக்கு கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், அதிக அளவிலான ” விருப்பு வெறுப்புகள் “கிடைத்துள்ளன.
நேற்யை மான்கிபார்த வீடியோவுக்கு வெகுஜன ” கட்டைவிரல் ” கிடைத்திருப்பது அசாதாரண மானது.
பி.எம்.ஓ இந்தியா சேனலில் வெளியிடப்பட்ட அதே வீடியோ ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் 17 கே “லைக்குகளுடன்” ஒப்பிடும்போது 12 கே “விருப்பு வெறுப்புகளை” பெற்றுள்ளது ”என்று யூடியூபர் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிமீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்து வருவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.