கொரோனா ஊராடங்கு தொடங்கிய திலிருந்தே சினிமா துறை முடங்கியது. படப்பிடிப்புகள். தியேட்டர்கள் என் எல்லா பணிகளும் முடங்கின. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடங்கி சினிமா தொழிலாளர்கள் வரை எல்லோரும் வேலை இழந்தனர்.
சினிமா ஷூட்டிங் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத்தின் சார்பில் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு களுடன் அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
முதல்வர் எடப்படி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். ’சினிமா படப்பிடிப்புகள் 75 பேர்களுடன் கொரோனா கட்டுபாடுகள் கடைபிடித்து நடத்திக்கொள்ளலாம். பார்வையா ளர்களுக்கு அனுமதி கிடையாது. சினிமா தியேட்டர் திறப்புக்கு அனுமதி தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி உள்ளார்.
நீண்ட நாட்களுக்கு ஷூட்டிங் பணிகள் தொடங்குவதால் படக்குழுவினர் ஜரூராக வேலையில் இறங்கி உள்ளனர். ஏற்கனவே டிவி படப்பிடிப்புக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்புக்கு