டெல்லி: இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வரும் மோப் நாய்க்கு ராணுவ தளபதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய ராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் பல மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இராணுவ ஸ்னிஃபர் நாய் சோஃபி, உயர்தரமான வெடிக்கும் கருவியைக் கண்டுபிடித்து ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றிது. இதற்காக அந்த நாய் கவுரவிக்கப்பட்டது.
இராணுவப் பணியாளர் பாராட்டுப் பதக்கத்துடன் இராணுவ ஸ்னிஃபர் நாய் சோஃபிக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
காஷ்மீர் மற்றும் பிற இடங்களில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஸ்னிஃபர் நாய்களின் பணி மகத்தானது, என்று இந்திய ஆர்மி தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel