சென்னை:
மிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும்.

பொதுவாக டாஸ்மாக் சென்னையில் திறந்தவுடன் பெரிய அளவில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடைகள் பெரும்பாலும் மந்தமாகவே காணப்பட்டு வருகின்றன. மதுபாட்டில்களின் விலை அதிகரிப்பினால் கூட்டம் குறைந்ததாகக் கருதப்படுகிறது, இருப்பினும் சனிக்கிழமைகளில் விற்பனை கொஞ்சம் அதிகரிக்கிறது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மது விற்பனை நேற்று மாலையில் இருந்து சூடு பிடித்தது. மற்ற நாட்களில் விற்பனை மந்தமாக இருந்து வரும் நிலையில் சனிக்கிழமைகளில் மட்டும் அதிக விற்பனை நடைபெறுகிறது.

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் இருந்து கூட்டம் குறைவாக காணப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் சென்னைக்கு வராததால் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி வரை சென்னையிலும், மற்ற பகுதிகளில் இரவு 8 மணி வரையிலும் விற்பனை நடந்தது. கடைசி நேரத்தில் மது வாங்குவதற்காக வரிசையில் காத்து நின்றனர். ஒரு சில இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும். கடந்த வாரம் ரூ.250 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனையானது.

நேற்று சென்னையில் ரூ.52.50 கோடிக்கும், திருச்சியில் ரூ.48.26 கோடிக்கும், மதுரையில் ரூ.49.75 கோடிக்கும், சேலத்தில் ரூ47.38 கோடிக்கும், கோவையில் ரூ.45.23 கோடிக்கும் மது விற்பனை நடந்து உள்ளது.

இந்த வாரம் மது விற்பனையில் சென்னை மண்டலம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக மதுரை 2-வது இடத்தை பிடித்துள்ளது.