உலகின் மூத்த திருமண தம்பதியர் என சாதனையை, ஈக்வடார் நாட்டில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தம்பதிகளான ஜூலியோ மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயின்டெரோஸ், 105, புகைப்படங் களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த தம்பதிகள் ஈக்வடாரின் குயிட்டோ பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் திருமண வாழ்க்ரகை 79 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இவர்கள் தங்களது வீட்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 28) அன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
இவர்கள் உலகின் மூத்த திருமணமான தம்பதியர் என்ற சாதனையை பெற்றுள்ளனர். இவர்களில், ஜூலியோ சீசர் மோராவுக்கு 110 வயதாகிறது. அவரது மனைவி வால்ட்ராமினா மேக்லோவியா, வரும் அக்டோபரில் அவர் 105 வயதை எட்டுவார்.
1908ம் ஆண்டு பிறந்த ஜூலியோ சீசர் மோரா பிரிட்டிஷ் ஓய்வூதியதாரர். உலகின் அதிகாரப்பூர்வ மாக உலகின் மூத்த மனிதர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்தவர். இந்த நிலையில், இந்த தம்பதியின்ர், உலகின் மிகப் பழமையான திருமணமான தம்பதியர் என்ற சாதனைக்கும் சொந்தமாகி உள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைகளின் அறிக்கையின்படி, அவரது சகோதரி தனது உறவினரை மணந்த தால், பள்ளி விடுமுறையின் போது இவரும் சந்தித்தனர் என்றும் சுமார் ஏழு வருட நட்பின் பின்னர், அவர்கள் பிப்ரவரி 7, 1941 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் ரகசிய திருமணமாகவே இருந்தது என்றும், பெற்றோர்கள் இந்த திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுத்ததால், நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்ன சில ஆண்டுகளாக, அவர்களுடன் மோரா மற்றும் குயின்டெரோஸ் உறவினர்கள் பழகவில்லை, ஆனால் பல ஆண்டுகளுக்குபிறகே அவர்கள் ஒன்றாக இணைந்தார்கள் என்று தெரிவித்க்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஓய்வு பெறும் வரை அவர்கள் இருவரும் ஆசிரியர்களாக இருந்தனர்.
இதுகுறித்து கூறிய அந்த தம்பதிகள், “அன்பின் விதிகளின் கீழ் குடும்ப ஒற்றுமை, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை மற்றும் குடும்ப விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சரியான கல்வி ஆகியவை ஆரோக்கியமான சகவாழ்வுக்கான திறவுகோல்கள்” என்று தெரிவித் துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு 5 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், அவர்களது குடும்பம், 11 பேரக்குழந்தைகள், 21 பேரப்பிள்ளைகள் மற்றும் 9 பெரிய-பேரப்பிள்ளைகள் கொண்ட ஒரு பெரிய குடும்பம் என்றும், அவர்களது மூத்த மகன் 58 வயதில் இறந்துவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினரின் மகள்களில் ஒருவரான ஆரா சிசிலியா, தனது பெற்றோர், திரைப்படங் களுக்கும் தியேட்டருக்கும் ஒன்றாகச் செல்வதையும், தோட்டக்கலை செய்வதையும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இரவு உணவை சாப்பிடுவதையும் ரசிக்கிறார்கள் என்று கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயால் அவர்கள் சமீபத்தில் ஒன்றுகூட முடியவில்லை, எனவே அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் மீண்டும் ஒன்றிணைவதை எதிர்பார்ப்ப தாகவும் கூறியுள்ளார்.