அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு முகமை, அமலாக்கத்துறை மற்றும் சுங்க இலாகா துறை என மூன்று துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் தினம் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், ஸ்வப்னாவிடம் தொலைபேசி தொடர்பில் இருந்த ‘ஜனம்’’ தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் அனில் நம்பியாரிடம் நேற்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நாள் அன்று அனில், ஸ்வப்னாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதையடுத்து அவரை கொச்சியில் உள்ள சுங்க இலாகா அலுவலத்துக்கு அழைத்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.
தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னாவின் கருத்தை கேட்க அவரிடம் பேசியதாக ஒப்புக்கொண்ட அனில் நம்பியார், ‘ஸ்வப்னாவை தான் இதற்கு முன்னர் ஓட்டலில் சந்தித்து பேசியதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
-பா.பாரதி.