சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ தேர்வு நடத்தப்படும் என்று விடாப்பிடியாக உள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஜேஇஇ தேர்வும், செப்.13ல் நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு எதிரானா மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சோனியாகாந்தி தலைமையிலான கூட்டத்தில் நீட், ஜேஇஇ தேர்வு பற்றி விவாதிக்கப்பட்டது.
இந் நிலையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
கொரோனாவுக்குப் பிறகு நீட் நடத்தலாம் என முதலமைச்சர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்!
நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! நிரந்தர விலக்கு. அதிமுக நழுவினாலும் திமுக அனுமதிக்காது என்று கூறி உள்ளார்.