ஹரியானா மாநிலத்தில் மோர்னி என்ற கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் ஆன் லைன் வகுப் பில் படிக்க ஸ்மார்ட் போன் கிடையாது. பல கிலோமீட்டர் தூரம் சென்று ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்களிடம் இவர்கள் படிக்கிறார்கள் என்ற செய்தி பத்திரிகையில் வெளியானது. இதை பலர் மேம்போக்காக பார்த்துவிட்டு கடந்து சென்றவர்களுக்கு இடையே சோனு சூட் அதை தனது பிரச்னையாக பார்த்தார்.
உடனடியாக டிவிட்டர் பக்கத்தில், ‘இனி அந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி இருக்காது. அவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிடும்’ என்று தெரிவித்தார்.
மறுநாள் அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நண்பர் மூலமாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அனுப்பி வைத்தார். அது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுபற்றி தெரிவித்த சோனு சூட் ‘ஹரியான பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் ளுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதை பார்க்கும் அற்புத நாள் தொடங்கியது’ என தெரிவித்திருக்கிறார்.