டெல்லி: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள் ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம்நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, விதிகள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கனவே இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
தீர்ப்பில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், பட்டியலின பிரிவினரிடையே உள்ஒதுக்கீடு வழங்கும் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உள்ளதாக அருண் மிஸ்ரா அமர்வு தெரிவித்துள்ளது.