கிரிக்கெட் வரலாற்றின் சாதனை  நாயகன் ‘சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்’ பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான  சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George “Don” Bradman) 1908ம் ஆண்டு  ஆகஸ்டுந்தேதி பிறந்தார். டான் அன்று அழைக்கப்பட்ட பிராட்மேன், கிரிக்கெட் ஆட்டத்தில் பேட்ஸ்மேனாக களமிறங்கி பல்வேறு வியத்து சாதனைகளை  புரிந்த வர்.  பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரது  பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

பிராட்மன் 29 முறை நூறு ரன்களையும்,  12 முறை இரட்டை நூறு ரன்களையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

டொனால்ட் பிராட்மனின் ரன்களின் சராசரி 99.94 சதவிகிதமாக உள்ளது.  தனது கடைசித் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல்   ‘ஏரிக் ஹோல்லிச் சுழல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அந்தப் போட்டியில் பிராட்மேன் 1 நான்கு ரன்கள் எடுத்திருந்தால், அவரது  சராசரி ரன்கள் விகிதம் 100ஆக இருந்திருக்கும்.

பிராட்மேனின், முதல் தேர்வுத் போட்டியில் மோசமான நிகழ்வுகளைச் சந்திக்க நேர்ந்தது. இங்கி லாந்து அணியுடனான அவரது அணி தொடர்ந்து தோல்விகை சந்தித்தது.  ஆனால் அடுத்தடுத்து நடந்த போட்டிகளில்  ஆட்டத்தின் போக்கையும், திறனையும் உள்வாங்கி ஆட்டத் தொடங்கினார்.

மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 79 மற்றும் 112 ரன்கள் அடித்து விளாசினார். இதனால், பிராட்மேனை ஏறெடுத்து பார்க்க வைத்தது. இந்த ரன்கள்  மூலம் மெல்போர்ன் துடுப்பாட்ட  கிரிக்கெட் மைதானத்தில், மிக இளம் வயதில் நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனைக்கு சொந்தமானார்.

இருந்த போதிலும் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. நான்காவது போட்டியிலும் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் இவர் 58 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆனால் 12 ஓட்டங்களில் அந்தப் போட்டியில் தோல்வியடைந்தது.[15] அந்த ஒரு போட்டி யில் மட்டுமே இவர் ரன் அவுட் ஆனார்.

ஆனால் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பிராட்மன் அதிரடியாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் பிராட்மன் 1,690 ரன்கள் குவித்து,  93.88 எனும் சராசரியோடு எடுத்திருந்தார்.

பின்னர் சிட்னி கிரிக்கெட் மைதான அரங்கில் விக்டோரியா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 340 ரன்கள்  எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

1929-30 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் இவரின் துடுப்பாட்ட சராசரி 113.28 ஆக இருந்தது.

இங்கிலாந்து தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில்  இவர் இறுதியாக 124 ஆட்டமிழக்காமல் இருந்தார். தலைவரான பில் உட்ஃபுல் இவரையே இரண்டாவது ஆட்டப் பகுதியினை துவங்கக் கேட்டுக்கொண்டார். அதில் இறுதிவரை ஆட்ட மிழக்காமல் 225 ஓட்டங்கள் எடுத்தார். பின் குயின்சிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் 452 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தரத் டகிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். 415 நிமிடங்களில் இவர் சாதனை படைத்தார்.

1930ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கு இவர் தேர்வானர். வோர்செஸ்டரில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பிராட்மன் 236 ரன்கள் எடுத்தார். அந்த ஆண்டின் மே மாத இறுதியில் அவர் 1,000 ஓட்டங்களை முதல் தரத் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அடைந்தார்.  இந்தச் சாதனையைப் புரிந்த முதல் ஆத்திரேலிய வீர மற்றும் சர்வதேச அளவில் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இவரின் இருபது வருட துடுப்பாட்ட வரலாற்றில் நிலையான ரன்களை  எடுத்துள்ளார். இதனைப் பற்றி ஆத்திரேலியத் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் பில் உட்ஃபுல் என்பவர் கூறுகையில் பிராட்மன் மூன்று ஆத்திரேலிய விரர்களுக்குச் சமம் என  பாராட்டியுளார்.

இவரின் ஓய்விற்குப் பிறகும் கூட முப்பது ஆண்டு காலங்கள் நிர்வாக இயக்குநர், எழுத்தாளராக இருந்தார். இவர் தேர்வுத் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஐம்பது ஆண்டுகள் கழித்து 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் இருபத்தி ஐந்தாவது பிரதமரான ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் மிகச்சிறந்தவர் என பிராட்மனைப் பாராட்டினார்.

இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவர் வாழ்ந்த காலகத்திலேயே இவரின் உருவப்படம் பொறித்த நாணயம், வில்லை ,  அருங்காட்சியகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இவர் பிறந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி ஆகஸ்டு 27, 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரே லிய ராயல் மின்ட்டானது பிராட்மனின் உருவம் பொறித்த $5 மதிப்புள்ள தங்க நாணயத்தை வெளியிட்டது.

2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஹால் ஆஃப் ஃபேமாக (புகழ் பெற்ற மனிதராக) அறிவித்தது.