பீகார் மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள் உடன்பாடு வைத்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ’மகாபந்தனம்’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, அண்மையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.
இந்த நிலையில்,’மகாபந்தனம்’ கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று புதிதாக இணைந்துள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும் இப்போது சட்டபேரவையில் ஒரு எம்.எல்.ஏ.வும் கிடையாது.
3 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள கம்யூனிஸ்ட் ( எம்.எல்.) கட்சியை ‘மகாபந்தனம்’’ கூட்டணியில் சேர்க்க, இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் முயற்சி மேற்கொண்டுள்ளன.
மூன்று இடதுசாரி கட்சிகளும் ‘மகாபந்தனம்’ கூட்டணியில் அங்கம் வகித்தால்,அந்த கூட்டணி வலிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
-பா.பாரதி.