முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் – மேனகா தம்பதியின் மகனுமான வருண் காந்தி, தென் மாநிலங்களில் அவ்வளவு தூரம் பிரபலம் ஆகாத முகம்.  அரசியல்வாதி என்ற அளவில் மட்டுமே பலருக்கு அறிமுகமாகியுள்ள வருண், சிறந்த எழுத்தாளர். கவிஞரும் ஆவார்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பட் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் நின்று சுமார் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

’’இந்தியாவில் ஜொலிக்கப்போகும், அடுத்த தலைமுறையின் 20 அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ’’என குறிப்பிட்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது.
அதில் வருணும் ஒருவர்.
அந்த புத்தகத்துக்கு பேட்டி அளித்துள்ள வருண் காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

‘’ வெறுப்பூட்டும் வகையில் நான் பேசியதாக கூறி என் மீது ஒரு சர்ச்சை உருவானது. உண்மையில் நான், கலகக்காரன் அல்ல. நான் இடதுசாரி சிந்தனையாளன். என் எழுத்துக்களே அதற்கு சாட்சி. இயல்பாகவே நான் வலதுசாரி கொள்கையில் ஈடுபடு கொண்டவன் கிடையாது’’ என்று குறிப்பிட்டுள்ள வருண்’’ எனது கம்யூனிஸ்ட் நண்பர்கள்,’’ நீங்கள் பா.ஜ.க.வில் உள்ள கம்யூனிஸ்ட்’’ என்று என்னிடம் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வதுண்டு’’ என்றும் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.