பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின் றனர். அவரது உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.
நடிகர் அர்ஜூன் பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் பற்றி இன்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
இனிமே ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரை மாதிரி யாரும் சாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தெலுங்கில் மட்டுமல்ல மலையாளத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சாதித்தவர். அப்படிப் பட்டவர் வேறுயாருமல்ல. வாழும் சாதனையாளர் பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம். கொஞ்ச நாளா உடல் நிலை சரியில்லாததால அவர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். கடவுள் அருளால் அவரது உடல்நிலை சீரடைந்தி ருக்கிறது.
பிரார்த்தனையை விட வேறு மருந்து எதுவும் இல்லை என்று சொல்வார்கள் எஸ்பிபிக்காக உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தார் கள் கூடிய சிக்கிரத்தில் எஸ்பிபி சார் ரொம்ப ஆரோக்கியமா திரும்பி வருவார். எஸ்பிபி சார் உங்களுக்காக காத்திருக்கி றோம்.
நீங்கள் போரட்ட குணம் கொண்டவர் என்பது எங்களுக்கு தெரியும் சீக்கிரதுல உங்க பாட்டை கேட்க ஆவலாக இருக்கி றேன். சிக்கிரம் வாங்க கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
இவ்வாறு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel