டெல்லி: டெல்லியில் இன்று 1,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று மேலும் 1,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,764 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மாநிலத்தில் 17 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 1,154 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,897 ஆகும். தற்போது வரை 12,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]