புதுடெல்லி:
காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் சோனியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் செப். 14-ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் மேற்குவங்கம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை அதிகாரிக்க வேண்டும் என மாநில முதல்வர்களிடம் வலியுறுத்துவது, நீட், ஜே.இ.இ., தேர்வுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறார்.
Patrikai.com official YouTube Channel