லெபனான்:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும்  ரசாயனம் கொண்ட 79 கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இம்மாதம் 4-ஆம் தேதி ரசாயனத்தால் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து லெபனான் இராணுவ வல்லுநர்கள் தற்போது ரசாயனங்கள் கொண்ட 79 கன்டெய்னர்களை கண்டுபிடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை மட்டும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் கொண்ட 25 கன்டெய்னர்களை லெபனான் ராணுவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு மற்ற ரசாயனங்களை கொண்ட 54 கண்டனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 4 -ஆம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில், லெபனானின் துறைமுகம் முழுவதுமாக சேதமடைந்தது, மேலும் இந்த பயங்கர வெடி விபத்து பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்னும் ரசாயனக் கசிவால் ஏற்பட்டது, இந்த இந்த வெடி விபத்தால் பெய்ரூட்டில் மட்டும் 170 பேர் உயிரிழந்து 40,000 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இராணுவ வல்லுநர்கள் ரசாயனம் கொண்ட 79 கண்டைனர்களை கண்டுபிடித்ததால், கோபமடைந்த பெய்ரூட் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.