விநாயகர் சதுர்த்தி அன்று நடுராத்திரியில் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லி பதிவு போட்டார்.. இந்த ஒரு ட்வீட் அரசியல் களத்தில் தீயாக பற்றி கொண்டு எரிந்த நிலையில், அதற்குரிய விளக்கத்தை உதயநிதியே தற்போது தந்துள்ளார்.

கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு மட்டும் திமுக எப்போதுமே வாழ்த்து சொல்லி வரும்.. அதே சமயம் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுக வை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் எருக்கம்பூ மாலையுடன் களிமண்ணாலான விநாயகர் சிலையை ஒருவர் வைத்திருப்பது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் .

இந்த ட்வீட், இணையத்தில் விவாதமாகியது.

உதயநிதி ட்விட்டர் பக்கத்தில் காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது,உதயநிதி ஒரு விளக்கத்தை இதுகுறித்து தந்துள்ளார்.. அதில், “எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ட்விட்டரில் போட்டது தன் அம்மாவின் விநாயகர் சிலை” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. என பதிவிட்டு உதயநிதி. இதனால் இது குறித்த பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .