டெல்லி: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் அனைவரின் வெப்ப நிலையை கண்டறிய கருவிகள் வைக்க வேண்டும்.
கைகளை கழுவ சானிடைசர், சோப் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மின்னணு எந்திரங்களை பயன்படுத்துபவர்கள் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சராங்களின் போது தனிமனித இடைவெளி அவசியம். தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாகும். கொரோனா நோயாளிகளுக்கு என தனி பூத் அமைக்க வேண்டும். 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலம் செல்லக் கூடாது.
வாக்கு எண்ணும் அறையில் அதிகளவாக 7 மேசைகள்தான் போட வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேர் மட்டுமே வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவே வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.