கடந்த நிதி ஆண்டில் ரயில் விபத்தில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை’’ என ரயில்வே கூறி வருகிறது.
இந்த நிலையில் நிதி ஆயோக் செயல் தலைவர் அமிதாப் காந்த்’’ மும்பை புறநகர் பகுதி ரயில்பாதையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்’’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு ரயில் வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
‘’ நிதி ஆயோக் செயல் தலைவர் குறிப்பிடும் மரணங்கள் அனைத்தும், தண்டவாளத்தை கடந்து சென்ற போதும், ரயிலில் இருந்து தவறி விழுந்தும் பலியானோரின் விவரங்கள் ஆகும். அவை ரயில் விபத்துகள் அல்ல. எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் ரயில் விபத்தில் யாரும் சாக வில்லை. முந்தைய ஆண்டும் எந்த உயிர் இழப்பும் கிடையாது’’ என வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
‘’கடந்த 3 ஆண்டுகளில் தண்டவாளத்தை கடந்து சென்ற போதும், ரயிலில் இருந்து தவறி விழுந்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரம்.’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘’ கடந்த 2018 ஆம் ஆண்டு அமிர்தசரசில் தசரா விழாவை காண வந்த 59 பேர் தண்டவாளத்தை கடந்த போது 2 ரயில்கள் மோதி பலியானார்கள். இதனை ரயில் விபத்தில் சேர்க்க முடியாது. அந்த சம்பவம் – ‘’TRESPASSING’’ என்றும் ரயில் வாரிய தலைவர் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-பா.பாரதி.