MG பகத் என்பவர் தானேவில் உள்ள திவ்யா இன்டர்நேஷனல் ஹோட்டலில் 2009ல் தங்கியருக்கும் போது மூன்று தண்ணீர் பாட்டில்கள் வாங்கியுள்ளார். பாட்டிலில் போடப்பட்டிருந்தது MRP 13 ரூபாய் ; ஆனால் ஹோட்டல் நிறுவனம் ஒரு பாட்டிலுக்கு 30 ரூபாய் வாங்கியது.
இதை எதிர்த்து செப்டம்பர் மாதம் 2009ல், பகத் ஒரு வழக்கு தொடர்ந்தார். பல வருடங்கள் சென்றும், இறுதியில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. பகத் அதிகமாகக் கொடுத்த 51 ருபாய், மற்றும் அவர் எடுத்துக்கொண்ட சிரமத்திற்க்காகவும் மனவுலச்சளுக்க்காகவும் 2000 ரூபாய், அந்த ஹோட்டல் நிறுவனம் வழங்குமாறு தீர்ப்பு வந்ததுள்ளது.
இதைப்போலவே இன்னொரு வழக்கில், ஒரு சினிமா திரையரங்கிற்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், வழக்கு தொடர்ந்த குமார் என்ற வாலிபர் எடுத்துக்கொண்ட சிரமத்திற்க்காகவும் மனவுலச்சளுக்க்காகவும் 6500 ரூபாய் வழங்குமாறு தீர்ப்பு வந்ததுள்ளது.
-ஆதித்யா