திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் குணம் அடைய பெப்ஸி தொழிலாளர்கள் 25 ஆயிரம்பேர் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்ஸி) தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நமது மூத்த சகோதரர், பாடகர், இசைய மைப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், அன்புக்குரிய எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என் பதை அறிந்து பெரும்|கவலை கொண்டுள் ளோம். தென்னிந்திய திரைப் படத் தொழி லாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அதனு டைய 25ஆயிரம் உறுப்பினர்களும், அவர் கள் குடும்பங்களும் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பூரண நலம் அடைந்து நல் ஆரோக்கியத்துடன் விரை வில் வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.
மொழி பேதமின்றி, இன பேதமின்றி உலகெங்கும் உள்ள இந்திய மக்களை தன் கான குரலால் மயக்கி வைத்த அந்த பாடும் நிலா மயக்கம் தெளிந்து மீண்டெழுந்து, அவரின் இசை பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கி றோம். அவர் விரைவில் நலம் அடைய வேண்டும் என பெப்ஸி சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும், அனைத்து உறுப்பினர் களும் அவர்களின் குடும்பத்தினரும் நாளை மாலை 20.8.8030 அன்று வியாழக் கிழமை மாலை 6.00 மணி அளவில் 5 நிமிடம் பிரார்த்தனை செய்கின்றோம். அவரவர்கள் எங்கு இருக்கிறார்களோ, அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் திரைப்படத் துறையைச் சேர்ந்த மற்ற சங்கத்தினரும் எங்கள் வேண்டு கோளை ஏற்று இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என அன்பு டன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு பெப்ஸி தலைவர் ஆர்,கே.செல்வமணி தெரிவித்திருக்கிறார்.