ஹாங்காங்: கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்திற்கு 2 வாரகால தடை அறிவித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம்.

கொரோனா முடக்கத்தால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டுவரும் வந்தே பாரத் திட்டத்தால், இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கிலிருந்து, தலைநகர் டெல்லிக்கு, ஆகஸ்ட் 18 மற்றும் 21ம் தேதியில், 2 வந்தே பாரத் திட்ட விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ‘வந்தே பாரத்’ திட்டத்துக்கு 2 வாரங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

விமானப் பயணங்களுக்கு முன்பாக, பயணிகளுக்கு முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ஹாங்காங் அரசு, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.