டெல்லி: பழம்பெரும் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.
பழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 1930ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்தார்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக இசையோடு வாழ்ந்த பண்டிட் ஜஸ்ராஜுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளை பெற்றவர். புகழ்பெற்ற அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: பண்டிட் ஜஸ்ராஜ் ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவு இந்திய கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. அவரது விளக்கக்காட்சிகள் மிகச்சிறந்தவை மட்டுமல்லாமல், பல பாடகர்களுக்கு ஒரு விதிவிலக்கான வழிகாட்டியாகவும் அவர் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.